/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சியுடன் பஞ்.,கள் இணைப்பு தலைவர், உறுப்பினர்கள் எதிர்ப்பு
/
நகராட்சியுடன் பஞ்.,கள் இணைப்பு தலைவர், உறுப்பினர்கள் எதிர்ப்பு
நகராட்சியுடன் பஞ்.,கள் இணைப்பு தலைவர், உறுப்பினர்கள் எதிர்ப்பு
நகராட்சியுடன் பஞ்.,கள் இணைப்பு தலைவர், உறுப்பினர்கள் எதிர்ப்பு
ADDED : அக் 01, 2024 07:39 AM
ஈரோடு: பவானி நகராட்சியுடன், 2 பஞ்சாயத்துக்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்கள் சேர்ந்து ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.மாநகராட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்துக்கள், பஞ்சாயத்துக்களின் எல்லைகள் மறுவரையறை செய்யப்பட்டு வருகிறது. மறுவரையறைப்படி ஒரு பட்டியலை அரசு வெளியிட்டது.இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக அரசு வெளியிடவில்லை. இருப்பினும், இத்திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.
இதன்படி ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, புன்செய் புளியம்பட்டி நகராட்சிகள் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக அருகே உள்ள பஞ்.,கள் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளன.இதுபோல, பவானி நகராட்சியுடன், குருப்பநாயக்கன்பாளையம் மற்றும் ஆண்டிகுளம் ஆகிய பஞ்சாயத்துக்களை இணைக்க உள்ளதாக அறிந்தோம். அவ்வாறு இணைக்கக்கூடாது.இதன் மூலம் உள்ளாட்சி அமைப்பும், மக்களும் பாதிக்கப்படுவர்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.இதில், குருப்பநாயக்கன்பாளையம் பஞ்., தலைவர் கே.ஏ.சுப்பிரமணியம், ஆண்டிகுளம் பஞ்சாயத்து தலைவர் விஸ்வநாதன் உட்பட உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.