/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு - அவினாசி திட்ட செயல்பாடு அரசு செயலருக்கு கலெக்டர் கடிதம்
/
அத்திக்கடவு - அவினாசி திட்ட செயல்பாடு அரசு செயலருக்கு கலெக்டர் கடிதம்
அத்திக்கடவு - அவினாசி திட்ட செயல்பாடு அரசு செயலருக்கு கலெக்டர் கடிதம்
அத்திக்கடவு - அவினாசி திட்ட செயல்பாடு அரசு செயலருக்கு கலெக்டர் கடிதம்
ADDED : மார் 01, 2024 01:55 AM
ஈரோடு:ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ., சாந்தகுமார் முன்னிலையில் நடந்தது.
கூட்ட விவாதம் வருமாறு:பவானி
ஆறு, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசன விவசாயிகள் சங்க தலைவர்
சுபிதளபதி: அத்திக்கடவு - அவினாசி திட்ட விதிகள், ஒழுங்காற்று
சட்டம் உருவாக்க வேண்டும். பவானிசாகர் அணையில் இருந்து பாசனம் பெறும்
கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி - அரக்கன்கோட்டை போன்ற
பாசனங்களுக்கான நீர் பாதிக்காத வகையில் திட்டம் வகுக்க வேண்டும்.
அமைச்சர்
முத்துசாமி, '400 கனஅடி தண்ணீர் பம்பிங் ஸ்டேஷன் பகுதிக்கு வந்தால்,
ஆற்றில் திறக்கப்பட்டால் அத்திக்கடவு - அவினாசி திட்டம்
செயல்பாட்டுக்கு வரும்' என்று கூறி வருகிறார். இத்திட்டம் உபரி நீரேற்று
திட்டம். உரிமை நீரேற்று திட்டமல்ல. அணை நிரம்பி, பாசனங்களுக்கு
தேவையான நீர் இருப்பு உள்ள நிலையில், தொடர் மழை காலத்தில் உபரியாக
காவிரி ஆற்றுக்கு செல்லும் நீரை, 1.5 டி.எம்.சி.,யை, 60 நாட்களில்
அத்திட்டத்துக்கு நீரேற்றலாம்.
கலெக்டர் ராஜகோபால் சுன்கரா:
அத்திக்கடவு - அவினாசி திட்டம் குறித்து என்னென்ன விதிமுறை தேவை.
நீரேற்றம் தொடர்பாக ஒழுங்காற்று விதிகளை ஏற்படுத்த அத்துறை
செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். உடனடியாக அதை அறிவிக்க வேண்டும்.
அவ்வாறு விதிகள் வகுக்காவிட்டால், தண்ணீர் நீரேற்றும்போது தேவையற்ற
பிரச்னை ஏற்படும். தற்போது கோடை காலமாக உள்ளதால், எத்தெந்த நீர்
வழிப்பாதை, நீராதாரங்களில் துார்வார வேண்டும் என விவசாயிகள்,
விவசாய அமைப்பினர் பட்டியல் தரலாம்.
ஏற்கனவே சிலர் பட்டியல்
வழங்கி உள்ளனர். தேர்தல் அறிவிப்புக்கு முன் பட்டியல் வழங்கினால்,
நிர்வாக அனுமதி வழங்க எளிதாகும். தேர்தல் அறிவித்தாலும், பணிகள்
தொடர்ந்து நடந்து வரும். இவ்வாறு பேசினார்.

