ADDED : நவ 06, 2026 05:19 AM
பெருந்துறை:பெருந்துறை
ஒன்றியம் விஜயமங்கலம் பகுதி அத்திக்கடவு-அவிநாசி திட்ட
போராட்டக்குழு கூட்டமைப்பின் சார்பாக, கவன ஈர்ப்பு கருத்தரங்கு,
விஜயமங்கலத்தில் நேற்று நடந்தது. அறத்தமிழ் பேரியக்கத்தின் விஜய்
சீத்தாராமன், அத்திக்கடவு-அவிநாசி திட்டக் கூட்டமைப்பின்
முருகபூபதி உட்பட பலர் பேசினர்.
ஈரோடு, திருப்பூர், கோவை
மாவட்டங்களை சேர்ந்த அத்திக்கடவு-அவிநாசி திட்டக்
கூட்டமைப்பினர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தில்
இணைக்கப்பட்டுள்ள, 1,045 குளம், குட்டைகளுக்கும் தடையின்றி
முழுமையாக தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுபட்டுள்ள, 1,400 குளம், குட்டைகளை ஆய்வு செய்து புதிய திட்டம்
தயாரித்து இணைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்திலும் தன்னார்வலர்களை
கொண்ட நீர் பாதுகாப்பு குழுக்களை அமைத்து, நீர் நிலைகளை பாதுகாக்கும்
இயக்கத்தை உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றினர்.
