/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'அத்திக்கடவு-அவிநாசி நிலை 2 திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'
/
'அத்திக்கடவு-அவிநாசி நிலை 2 திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'
'அத்திக்கடவு-அவிநாசி நிலை 2 திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'
'அத்திக்கடவு-அவிநாசி நிலை 2 திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்'
ADDED : ஆக 28, 2024 07:26 AM
புன்செய்புளியம்பட்டி: 'அத்திக்கடவு-அவிநாசி நிலை 2 திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்' என்று புன்செய் புளியம்பட்டியில் நடந்த கூட்டத்தில், விவசாயிகள் தீர்மானம் நிறைவேற்றினர்.
பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியை ஒட்டி காரமடை, அன்னுார், பவானிசாகர் ஒன்றியங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள குளம், குட்டைகள் வறண்டு பல ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக விடப்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குளம், குட்டைகளில் நிரப்பினால், விவசாயிகள், பயன்பெறுவர். கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனக்கோரி, அத்திக்கடவு-அவிநாசி நிலை 2 திட்ட ஆர்வலர்கள் குழு, கிராமங்கள் தோறும் கூட்டம் நடத்தி வருகிறது. இதன்படி திட்ட ஒருங்கிணைப்பாளரும், ஓய்வு பெற்ற தாசில்தாருமான பழனிச்சாமி தலைமையில், புன்செய் புளியம்பட்டியில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்ட அமைப்பாளர் ஜோதி அருணாச்சலம் முன்னிலை வகித்தனர். சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அத்திக்கடவு-அவிநாசி நிலை இரண்டு திட்டத்தை நிறைவேற்ற, தமிழக அரசை வலியுறுத்தும் வகையில், கிராமங்கள் தோறும் கிளை அமைத்து, அரசின் கவனத்தை ஈர்க்க விவசாயிகளை ஒருங்கிணைத்து இரு சக்கர வாகன பேரணி நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர்களை சந்தித்து, மனு அளிக்கவும் முடிவு செய்தனர்.