/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சகோதயா கூட்டமைப்பு சார்பில் மழலையருக்கான தடகளம்
/
சகோதயா கூட்டமைப்பு சார்பில் மழலையருக்கான தடகளம்
ADDED : மார் 03, 2024 01:50 AM
ஈரோடு;ஈரோடு ஆர்டி இன்டர்நேஷனல் பள்ளி மற்றும் ஈரோடு சகோதயா கூட்டமைப்பு பள்ளிகளின் சார்பில், மழலையர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தன.
தடகள போட்டி துவக்க விழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக ஆர்டி பள்ளி நிறுவன தலைவர் டாக்டர். செந்தில் குமார், பள்ளி தலைவர் ராகுல், செயலாளர் ராதா, சி.இ.ஓ., கீர்த்தனா, ஈரோடு சகோதயா கூட்டமைப்பு தலைவர் அமித் குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தடகள போட்டியில், 20க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மழலையர் விளையாடினர்.வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பள்ளி முதல்வர் சங்கர் செய்திருந்தார்.

