/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வழிப்பறியில் வாலிபர் மீது தாக்குதல்;மேலும் இருவர் கைது
/
வழிப்பறியில் வாலிபர் மீது தாக்குதல்;மேலும் இருவர் கைது
வழிப்பறியில் வாலிபர் மீது தாக்குதல்;மேலும் இருவர் கைது
வழிப்பறியில் வாலிபர் மீது தாக்குதல்;மேலும் இருவர் கைது
ADDED : மே 23, 2024 06:54 AM
ஈரோடு : ஈரோட்டில், வழிப்பறியில் ஈடுபட்டு வாலிபரை தாக்கி மொபட்டை பறித்து சென்ற சம்பவத்தில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு, டீச்சர்ஸ் காலனி புத்தர் வீதியை சேர்ந்த திருநாவுக்கரசு மகன் நவீன் குமார், 29. திருப்பூரில் உள்ள மில்லில் வேலை செய்து வருகிறார். கடந்த, 18ல் பெரியசேமூரில் உள்ள நண்பரை பார்க்க மொபட்டில் சென்றார். பெரிய சேமூர் மயானம் அருகே மொபட்டை நிறுத்தி சிறுநீர் கழித்தார். அப்போது அங்கு வந்த நான்கு பேர், நவீன் குமாரிடம் பணம் கேட்டு அடித்து உதைத்தனர். மேலும் அங்கிருந்த தென்ன மட்டையால் தாக்கி, மொபட்டுடன் அங்கிருந்து தப்பி சென்றனர். நவீன்குமார் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார்.
வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து அதே பகுதியை சேர்ந்த சந்திரகுமார், 25, கார்த்தி, 24, ஆகிய இருவரை கைது செய்தனர். இந்நிலையில் இதில் தொடர்புடைய, ஈரோடு சூளை பெரிய சேமூர் முதலி தோட்டத்தை சேர்ந்த ஹரிகரன், 23, சி.என். கல்லுாரி எதிர் பகுதியை சேர்ந்த ரிஷி, 21, ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

