/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பலமுறை மனு தந்தும் பலனில்லாததால் கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயற்சி

ADDED : டிச 10, 2024 01:44 AM
பலமுறை மனு தந்தும் பலனில்லாததால்
கலெக்டர் ஆபீஸில் தீக்குளிக்க முயற்சி
ஈரோடு, டிச. 10-
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், முதியவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கவுந்தப்பாடி அருகே சின்னபுலியூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 69; விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான இடத்துக்கு பத்திரம், பட்டா போன்ற ஆவணங்கள் உள்ளன. ஆனால், அங்குள்ள சிலர் ஆக்கிரமிப்பு செய்து, நிலத்தை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படுத்தி வருகின்றனர்.
இதை கண்டித்தும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க கிருஷ்ணமூர்த்தி நேற்று வந்தார். அப்போது தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து, சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அப்போது கிருஷ்ணசாமி கூறுகையில், ''இந்த பிரச்னை குறித்து பலமுறை கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகத்தில் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இனி வாழ்ந்து பயனில்லை என்பதால் தீக்குளிக்க முயன்றேன்,'' என்றார்.