/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசுப்பள்ளி அருகே 'பார்' அமைக்க முயற்சி; கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
அரசுப்பள்ளி அருகே 'பார்' அமைக்க முயற்சி; கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசுப்பள்ளி அருகே 'பார்' அமைக்க முயற்சி; கண்டித்து ஆர்ப்பாட்டம்
அரசுப்பள்ளி அருகே 'பார்' அமைக்க முயற்சி; கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 23, 2024 04:20 AM
நம்பியூர்: நம்பியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில், தனியார் மது 'பார்' அமைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், தலைவர் ஜவஹர் பாபு தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சில ஆண்டுகளுக்கு முன், நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே அரசு மதுபானக் கடை செயல்பட்டது. கடும் எதிர்ப்பால் வேறிடத்துக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் பள்ளி அருகில், தனியார் மது 'பார்' அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே புகாரளித்துள்ளோம். ஆனாலும் பணி நடந்து வருகிறது. இங்கு பார் அமைந்தால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கருத்தில் கொண்டு, அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இல்லையேல் நம்பியூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.