ADDED : நவ 03, 2024 01:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.2 லட்சத்துக்கு
விளைபொருள் ஏலம்
பவானி, நவ. 3-
பவானி அருகே மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 22 மூட்டை எள் வரத்தானது. இதில் வெள்ளை எள் கிலோ, 90 ரூபாய் முதல், 131 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் நான்கு மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, ஒரு கிலோ, 60 ரூபாய் முதல் 117 ரூபாய், ஒரு மூட்டை உளுந்து வரத்தாகி கிலோ, 81 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு வேளாண் பொருட்கள் ஏலம் போனது.