ADDED : ஆக 14, 2026 05:27 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு
கணபதிபாளையம் மன்னாதம்பாளையம் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ரவி,
27; வெல்டிங் வேலை செய்தார். இவர் மனைவி சூர்யா. தம்பதிக்கு நான்கு
வயதில் ஆண் குழந்தை உள்ளது.
மாத ஏலச்சீட்டை ரவி நடத்தினார். ஒரு
சிலர் பணம் கொடுக்காத நிலையில், கடன் பெற்று சீட்டு ஏலம்
எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததால், கடன் அதிகமானது. ஒரு
கட்டத்தில் கடனை கட்ட முடியாமல் விரக்தி அடைந்தார்.
இதனால் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
