ADDED : ஆக 14, 2026 05:26 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:கோவை மாட்டம் பொள்ளாச்சி கோட்டூரை சேர்ந்தவர்கள் கவுதம், 24, நாகராஜ், 21; இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் பெண்ணிடம், கத்தி முனையில் வழிப்பறியில் ஈடுபட்டனர். வெள்ளோடு போலீசார் இருவரையும் கைது செய்து, பெருந்துறை கிளை சிறையில் அடைத்தனர்.
இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க, ஈரோடு எஸ்.பி., கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். கலெக்டர் கந்தசாமி பரிசீலனையை ஏற்றதால் இருவர் மீதும், குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை தொடர்ந்து இருவரும் கோவை மத்திய சிறையில் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டனர்.
