/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

ADDED : நவ 20, 2025 01:51 AM
ஈரோடு, ஈரோடு சூளை பகுதியில் இருந்து, பெரியசேமூர் செல்லும் சாலை ஓரங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
மாநகராட்சி 8 வது வார்டுக்கு உட்பட்டது பெரியசேமூர். இங்கிருந்து சூளை, சத்தி ரோடு ஆகிய இடங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் பிரதான சாலையின் ஓரத்தில், கோழி இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
குறிப்பாக, இறந்து போன கோழிகளை வீசி செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கழிவுகளை சாப்பிடுவதற்காக, தெரு நாய்கள் சாலையின் குறுக்கே செல்வதால், அவ்வழியாக வரும் வாகனங்கள் விபத்திற்கு உள்ளாக நேரிடுகிறது. எனவே, சாலைகளில் இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து, அபராதம் விதிப்பதோடு முறையான அனுமதியின்றி செயல்படும் இறைச்சி கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்தனர்.