ADDED : நவ 20, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை யூனியன், முருங்கத்தொழுவு ஊராட்சி, காளிக்காவவலசு பகுதியில், சாய ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்தப்படுத்தாமல், நிலத்தில் விடுவதால், அருகில் உள்ள விவசாய கிணறுகளில் தண்ணீரின் நிறம் மாறி உள்ளது.
மேலும், அந்த பகுதியில் வசிக்கும் பலருக்கு, புற்றுநோய் அபாயம் உள்ளதாக, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பொதுமக்கள் பல முறை புகார் மனு அளித்துள்ளனர். சாய தண்ணீரை சுத்தப்படுத்தி மறு சுழற்சி முறையில் பயன்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

