/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தென்னை மரம் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
/
தென்னை மரம் விழுந்து ஆட்டோ டிரைவர் பலி
ADDED : ஜன 04, 2025 01:44 AM
தென்னை மரம் விழுந்துஆட்டோ டிரைவர் பலி
கோபி, ஜன. 4-
கவுந்தப்பாடி அருகே குட்டிபாளையத்தை சேர்ந்தவர் காமாட்சி, 52, ஆட்டோ டிரைவர்; கவுந்தப்பாடி அருகே சிங்காநல்லுாரை சேர்ந்தவர் செங்கோட்டையன், 45; அதே பகுதியை சேர்ந்த பாலக்கிருஷ்ணன் தோட்டத்தில் பட்டுப்போன தென்னை மரத்தை வெட்டி எடுத்து வர, காமாட்சியின் சரக்கு ஆட்டோ வாடகைக்கு நேற்று காலை அழைத்து சென்றார். இயந்திர உதவியுடன் தென்னை மரத்தை செங்கோட்டையன் அறுத்து கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேல் பாகம் காமாட்சி தலை மீது விழுந்து பலத்த காயமடைந்தார். கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காமாட்சியின் மகன் சசிக்குமார் புகாரின்படி, திங்களூர் போலீசார் செங்கோட்டையன் மற்றும் பாலகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.