/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பைக் டாக்ஸி'களுக்கு தடை ஆட்டோ டிரைவர்கள் மனு
/
'பைக் டாக்ஸி'களுக்கு தடை ஆட்டோ டிரைவர்கள் மனு
ADDED : ஜூலை 08, 2025 01:11 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., - எல்.பி.எப்., - எஸ்.டீ.டி.யு., அமைப்புகள் சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது:
இன்சூரன்ஸ், பர்மிட், வரி, வாகன உதிரி பாகங்களின் விலை உயர்வால் ஆட்டோ ஓட்டுனர், உரிமையாளர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மறுபுறம் மகளிர் பஸ், ேஷர் ஆட்டோ, மினிபஸ் என பல பொது போக்குவரத்தால் வாகன சேவை பாதித்துள்ளது. இச்சூழலில் அரசால் அனுமதிக்கப்படாத ரேபிடோ உட்பட பல பெயரில், பைக் டாக்ஸிக்களை சட்ட விரோதமாக ஓட்டி வருகின்றனர். இவற்றை தடை செய்ய வேண்டும். மேலும், மாவட்ட எல்லை தாண்டிய பயணம் என, ஈரோட்டின் புறநகர் பகுதிக்கு ஆட்டோ ஓட்டினாலும், அதிகாரிகள் அபராதம் விதிக்கின்றனர். ஆட்டோ பர்மிட் பெற்ற விலாசத்தில் இருந்து, 30 கி.மீ., துாரம் ஓட்டலாம் என விதியிருந்தும், 'ஜம்பிங் பர்மிட்' அனுமதித்து வழங்கி இயக்க ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.