/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆட்டோ கண்ணாடி உடைப்பு நா.த.க.,வினரிடம் விசாரணை
/
ஆட்டோ கண்ணாடி உடைப்பு நா.த.க.,வினரிடம் விசாரணை
ADDED : ஜன 30, 2025 05:03 AM
ஈரோடு: ஈரோடு, மேட்டூர் சாலையில் இருந்து ஜி.ஹெச். ரவுண்டானா நோக்கி நேற்று மதியம், 12:10 மணியளவில் நா.த. கட்சியின் பிர-சார வாகனமான மினி சரக்கு ஆட்டோ சென்றது. அதில் வேட்-பாளர் சீதாலட்சுமி இருந்தார். அந்த வாகனத்துக்கு பின்னால், அக்-கட்சியின் மற்றொரு வாகனமான டெம்போ டிராவலர் சென்றது.
இரு வாகனங்களுக்கு இடையே, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த நாகராஜ், 65, என்பவருக்கு சொந்தமான டாடா ஏஸ் சரக்கு ஆட்டோ சென்றது. டெம்போ டிராவலர் முன் செல்ல வழிவிட-வில்லை என்று கூறி, நா.த. கட்சியை சேர்ந்த சிலர் நாகராஜூடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவரது சரக்கு ஆட்-டோவின் முன்புற கண்ணாடியை உடைத்து, நாகராஜூவையும் கைகளால் தாக்கினர். இதில் காயமடைந்த நாகராஜ், ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரை பெற்ற போலீசார், நாகராஜை தாக்கிய நா.த. கட்சியை சேர்ந்த இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். நாகராஜை அடித்தும், சரக்கு ஆட்டோவுக்கு சேதம் விளைவித்தது-மான சம்பவத்தில், துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் ஆதி நாராயணன், 45, அரியலுார் புகழேந்தி, 25, ஆகிய இருவர் மீதும் ஈரோடு ஜி.ஹெச் போலீசார் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்ப-திந்து கைது செய்தனர்.