/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அவிநாசி-அத்திக்கடவு திட்டக்குழாய் உடைப்பால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம்

ADDED : ஆக 23, 2024 04:32 AM
நம்பியூர்: நம்பியூரை அடுத்த சாலைப்பாளையம் பகுதியில், சின்ன செட்டி-யாபாளையம், பெரிய செட்டியாபாளையம், எம்மாம்பூண்டி, வரப்-பாளையம், ராயர்பாளையம் என, 10க்கும் மேற்பட்ட கிராமங்க-ளுக்கு தரைப்பாலத்தை கடந்து செல்ல வேண்டும்.
சாலைப்பாளையம் குளம் அருகே செல்லும் அத்திக்கடவு-அவி-நாசி திட்டத்தின் ராட்சத குழாயில் நேற்று உடைப்பு ஏற்ப்பட்டு, 20 அடி உயரத்துக்கு தண்ணீர் பீறிட்டு ஊற்றியது. இதனால் அருகில் இரண்டு குளங்கள் முற்றிலும் நிரம்பியது. அதேசமயம் சாலைப்பாளையம் செல்லும் தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், கனரக வாகனங்கள் செல்ல முடியாமல், 6 கி.மீ., துாரம் சுற்றி மாற்றுப்பாதையில் செல்கின்றன.
தரைப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அதேச-மயம் குழாய் உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக செல்கிறது.