/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் தந்து மக்களுக்கு விழிப்புணர்வு
/
எஸ்.ஐ.ஆர்., படிவம் தந்து மக்களுக்கு விழிப்புணர்வு
ADDED : நவ 09, 2025 04:44 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி நடந்து
வருகிறது. இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:
கணக்கெடுப்பு
காலத்தில் வாக்காளர்கள் எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்க வேண்டாம்.
படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்காத வாக்காளர் பெயர், வரைவு
வாக்காளர் பட்டியலில் இடம் பெறாது. கணக்கெடுப்பு முடிந்த பின், வரைவு
வாக்காளர் பட்டியல் டிச.,9ல் வெளியிடப்படும். அப்பட்டியலில் இடம்
பெறாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
அதற்கான காரணங்கள்
அந்தந்த உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பார்வைக்கு
வைக்கப்படும். பின் வாக்காளர்கள் வழங்கும் கோரிக்கை மனு
விசாரிக்கப்பட்டு, பிப்.,7ல் வெளியிடப்படும் இறுதி வாக்காளர்
பட்டியலில் இடம் பெறும். இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பெருந்துறை யூனியன் துடுப்பதி பஞ்.,
மற்றும் பவானி யூனியன் குருப்பநாயக்கன்பாளையத்தில் நடந்தது.
அப்போது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, படிவம் வழங்கப்பட்ட
இடங்களில் கலெக்டர் ஆய்வும் நடந்தது. இவ்வாறு கூறினார்.

