ADDED : செப் 20, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சித்தோடு
வாசவி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் காசநோய், எய்ட்ஸ் ஒழிப்பு,
புகையிலை, போதை பழக்க தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார் தலைமை வகித்தார்.
காசநோய் பரவும்
விதம், அறிகுறி, பரிசோதனை மற்றும் சிகிச்சை, அரசின் உதவித்தொகை
மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிப்பு, தடுப்பு முறைகள், புகையிலை மற்றும் போதை
பொருட்கள் பயன்பாடு, புற்றுநோய் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தினர். மாவட்ட காசநோய் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர்
சதன்சர்மா, மேற்பார்வையாளர் சிவகுமார், சங்கீதா உட்பட பலர்
பங்கேற்றனர். இதில் பங்கேற்ற கல்லுாரி மாணவ, மாணவியர், 300க்கும்
மேற்பட்டோருக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி,
உறுதிமொழி ஏற்றனர்.
