ADDED : செப் 20, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
பவானி:ஆப்பக்கூடல்
அருகே கூத்தம்பூண்டியை சேர்ந்தவர் செங்கோட்டையன், 55;
கூத்தம்பூண்டியில் துபாய்காரர் தோட்டத்தில் கிணறு துார்வாரும்
பணியில் ஒரு வாரமாக ஈடுபட்டார். நேற்று காலை கிணற்றில் தண்ணீர்
வரத்தானதால் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம்
கிணற்றுக்குள் வைத்திருந்த மண்வெட்டியை எடுக்க கிரேன் உதவியுடன்
இறங்கினார்.
அப்போது கிணற்று மோட்டாரில் இருந்து கசிந்த மின்சாரம்
தண்ணீரில் பாய்ந்துள்ளது. இது தெரியாமல் தண்ணீரில் கால் வைத்த
செங்கோட்டையன் மின்சாரம் தாக்கி பலியானார். ஆப்பக்கூடல் போலீசார்
உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
