ADDED : செப் 20, 2026 06:48 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சூரம்பட்டி நால்ரோடு சீனிவாசா தியேட்டர் பகுதியில், கருடா
ஆம்புலன்ஸ் அலுவலகம் உள்ளது.
அங்குள்ள ஓட்டு கட்டட அறையில் குளிர்
சாதன பெட்டி, ஸ்ட்ரெச்சர் மற்றும் முதலுதவி மருந்து பொருட்கள்
வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த அறையில் இருந்து
கரும்புகை வெளிவந்தது. ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஸ்ரீராம் தகவலின்படி
ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும் மின்சாதன பொருட்கள், மருந்து பொருட்கள் என, 50 ஆயிரம் ரூபாய்
மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி விட்டன. மின் கசிவால் தீ
விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
