ADDED : ஜன 13, 2025 03:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயம் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பழனி மலை கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர்.
இந்நி-லையில் காங்கேயம் போலீசார் சார்பில், பக்தர்களுக்கு நேற்று விழிப்புணர்வு செய்யப்பட்டது. சாலையில் கவனமாக நடந்து செல்ல வேண்டும், போக்குவரத்து விதிகளை மீறக்கூடாது என தெரிவித்தனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் காங்கேயம்-தாரா-புரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.