/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சுகாதார ஆய்வாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
/
சுகாதார ஆய்வாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : நவ 21, 2024 06:28 AM
ஈரோடு: ஈரோடு, காந்திஜி சாலை மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில், பாதாள சாக்கடை பணிகளை கையாள்வது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். இதில், மாநகராட்சியின் நான்கு மண்டலங்களிலும், பாதாள சாக்கடை பணிகளை எவ்வாறு பாதுகாப்பான முறையில் கையாள்வது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும், பாதாள சாக்கடை பணிகள் குறித்து மின்னணு திரையில் ஒளிபரப்பப்-பட்டு செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, செப்டிங் டேங்க் வாகன உரிமையாளர்களுக்கு, டேங்க் கழிவுகளை பாது-காப்பாக அகற்றுவது, அந்த கழிவுகளை அனுமதிக்கப்பட்ட இடத்தில் வெளியேற்றுவது குறித்து விளக்கம் அளித்தனர். மேலும், செப்டிக் டேங்க் வாகனம் வாங்க மாநகராட்சியின் கடனு-தவி திட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.சுகாதார ஆய்-வாளர்கள், செப்டிக் டேங்க் வாகன உரிமையாளர்கள், பணியாளர் கள் கலந்து கொண்டனர்.

