/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு
/
ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 07, 2024 03:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:அயலுார்
ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், கோபி அருகே வடுகபாளையத்தில், காச
நோய் ஒழிப்பு மற்றும் புகையிலை, இளம் வயது திருமண எதிர்ப்பு
விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
மாவட்ட நலக்கல்வியாளர்
சிவக்குமார் தலைமை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர்
செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். காசநோய் ஒழிப்பு,
வயிற்றுப்போக்கு நோய் தடுப்பு, புகையிலை மற்றும் போதைப்பழக்க
எதிர்ப்பு, நுரையீரல் காச நோயின் அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு
ஏற்படுத்தினர்.