நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 11-
தேசிய நுகர்வோர் தின விழாவை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், விழிப்புணர்வு பேரணி நடந்தது.
மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார் வரவேற்றார். கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேரணியை துவக்கி வைத்தார்.
உணவு பொருளில் கலப்படம் செய்தால், 10 லட்சம் ரூபாய் அபராதம், 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தரமான பொருட்களை வினியோகிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை, நுகர்வோர் அமைப்பினர், கல்லுாரி மாணவ, மாணவியர் ஏந்தி பங்கேற்றனர்.