/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
/
தீயணைப்பு துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
ADDED : ஏப் 20, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தீயணைப்பு துறை சார்பில் தீத்தொண்டு நாள் வாரத்தை முன்னிட்டு, ஈரோடு தீயணைப்பு துறை சார்பில், இருசக்கர விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தலைமை தீயணைப்பு அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, காளைமாடு சிலை, ரயில்வே ஸ்டேஷன், ஸ்டோனி பிரிட்ஜ், பெரியார் நகர் ஆர்ச், பெரியார் நகர், காந்திஜி சாலை வழியே மீண்டும் தீயணைப்பு அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில் உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர்கள் கணேசன், கலைச்செல்வன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.