ADDED : செப் 13, 2025 01:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி சார்பில் நெகிழி மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. மேயர் நாகராத்தினம் தலைமை வகித்தார். ஆணையர் அர்பித் ஜெயின் முன்னிலை வகித்தார். முன்னதாக பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும், புகையிலை பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்றனர்.
பேரணியில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், என்.சி.சி., மாணவர்கள், மாநகராட்சி ஊழியர்கள் என, 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கி, மீனாட்சி சுந்தரனார் சாலை, ஜி.எச்.ரவுண்டானா, பெருந்துறை ரோடு வழியாக காலிங்கராயன் விருந்தினர் மாளிகையில் நிறைவடைந்தது.