ADDED : அக் 13, 2026 06:17 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: தகவல் அறியும் உரிமை சட்டம் குறித்த விழிப்-புணர்வு பேரணி, ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து நடந்தது. ஈரோடு அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
ஆர்.டி.ஓ., முத்துசாமி பேரணியை துவக்கி வைத்தார். திருமகன் ஈவெரா சாலை, காந்திஜி சாலை வழியாக ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நிறைவடைந்தது. தகவல் அறியும் உரிமை சட்ட விதி, செயல்பாடு, தகவல் அறியும் உரிமை குறித்த பதாகைகளை ஏந்தி சென்றனர்.
