ADDED : அக் 13, 2026 06:18 AM
ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஈரோடு தாலுகா செயலர் தனலட்சுமி தலைமையில் மனு வழங்கி கூறிய-தாவது:
அரசு போக்குவரத்து கழகம் பெருந்துறை கிளைக்கு உட்பட்ட, 'பி12' அரசு நகர பஸ், பெருந்-துறை - பவானி; பவானி - பெருந்துறை இடையே இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளி, கல்லுாரி, வேலைக்கு செல்வோர், வணி-கர்கள் பாதிக்கின்றனர். முறையான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர வெற்றி பயணத்தில் இயக்கப்படும் பஸ்கள், ஸ்டாப்களில் பெண்கள் நின்றால் ஏற்றுவ-தில்லை. நிறுத்தப்பட வேண்டிய ஸ்டாப்பிலும் நிறுத்தி இறக்கி விடுவதில்லை. கண்டக்டரிடம் கேட்டால், 'ஓசி பயணம் செய்கிறீர்கள். இதில் சட்டம் பேசுகிறீர்கள்' என்கின்றனர். இதுபோன்ற புகார்களை தெரிவிக்க பஸ்களிலேயே புகார் எண் குறிப்பிட வேண்டும். இவ்வாறு கூறினர்.
