/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரக ஒதுக்கீடு குறித்து விசைத்தறி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு
/
ரக ஒதுக்கீடு குறித்து விசைத்தறி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு
ரக ஒதுக்கீடு குறித்து விசைத்தறி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு
ரக ஒதுக்கீடு குறித்து விசைத்தறி உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 03, 2024 01:59 AM
சென்னிமலை;சென்னிமலையில், விசைத்தறி உரிமையாளர்களுக்கு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
சென்னிமலை வட்டார விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமை வகித்தார். கைத்தறி ரக ஒதுக்கீடு துறை அமலாக்க துறை ஆய்வாளர்கள் ஜெகதீசன், தேவி, சங்கீதா ஆகியோர் கைத்தறி துணி ரகங்கள் குறித்து விளக்கி பேசினர். கூட்டத்தில் ஈரோடு உதவி அமலாக்க அலுவலரும், உதவி இயக்குனருமான ஜெயவேல் கணேசன் பேசுகையில்,'' கைத்தறிக்கு என ஒதுக்கப்பட்டு அதில் சில விதிமுறைகளுக்கு உட்பட்ட சேலை, வேட்டி, டவல், லுங்கி, பெட்ஷீட், ஜமக்காளம், டிரஸ் மெட்டீரியல், கம்பளி, சால்வை, உல்லன் ட்வீட், சந்தர் ஆகிய, 11 ரகங்களை விசைத்தறையில் உற்பத்தி செய்யக்கூடாது.
மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் விசைத்தறி உரிமையாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
கைத்தறி நெசவு தொழிலில், 40 முதல் 50 ஆண்டுகள் வரை நெசவு செய்து வருபவர்களுக்கும், தார் சுற்றுபவர்களுக்கும் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. 100 -க்கும் மேற்பட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். விசைத்தறி உரிமையாளர்கள் சங்க செயலாளர் சவுந்தரராஜன் நன்றி கூறினார்.

