/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் விற்பனையை தடுக்க விழிப்புணர்வு
ADDED : செப் 20, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, செப். 20-
பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற தலைப்பில், ஈரோடு மாநகராட்சி சார்பில், மாநகராட்சி அலுவலகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
உணவு பேக்கிங் செய்வதற்கான பிளாஸ்டிக் ஷீட், பிலிம் ஒட்டிய ஷீட், பிளாஸ்டிக் தெர்மோகோல் தட்டுகள், முலாம் பூசப்பட்ட பேப்பர் தட்டு, பிளாஸ்டிக் டீ கப், தண்ணீர் பாக்கெட், கேரி பேக்குகள் உள்ளிட்டவைகளை தவிர்த்து, வாழை இலை, பாக்கு மர இலை, கண்ணாடி மற்றும் உலோக டம்ளர்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டதுடன், இது தொடர்பான விழிப்புணர்வு வாசகம் அடங்கிய துண்டு பிரசுரம் மக்களுக்கு
வழங்கப்பட்டது.