/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரவு முழுவதும் கொட்டிய மழை சாலையில் தேங்கியதால் அவஸ்தை
/
இரவு முழுவதும் கொட்டிய மழை சாலையில் தேங்கியதால் அவஸ்தை
இரவு முழுவதும் கொட்டிய மழை சாலையில் தேங்கியதால் அவஸ்தை
இரவு முழுவதும் கொட்டிய மழை சாலையில் தேங்கியதால் அவஸ்தை
ADDED : டிச 03, 2024 01:22 AM
ராசிபுரம், டிச. 2-
வங்க கடலில் உருவான புயல் காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராசிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, வெண்ணந்துார், மங்களபுரம், பேளுக்குறிச்சி, பட்டணம், அணைப்பாளையம், முத்துக்காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் காலை முதல் துாறல் மழை பெய்து வந்தது.
நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியில் இருந்து, நேற்று காலை வரை தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால், சாலையோரம் வயல்களில் மழைநீர் தேங்கி நின்றது.
தொடர் மழை காரணமாக, இரண்டு நாட்களாக குளிரும் அதிகரித்துள்ளது. நாமகிரிப்பேட்டை பஸ் ஸ்டாண்ட், அரசு பள்ளி மாணவியர் விடுதி, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல், வளர்ந்துள்ள சோளத்தட்டுகள் மழைக்கு சாய்ந்து விட்டன. பல இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக மாறியது. நேற்று காலை நிலவரப்படி ராசிபுரத்தில், 65 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. மாவட்டத்தில் கொல்லிமலைக்கு அடுத்து ராசிபுரத்தில் தான் அதிக மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.