ADDED : அக் 15, 2024 02:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயுத பூஜை குப்பை
கழிவுகள் அகற்றம்
காங்கேயம், அக். 15-
காங்கேயம் நகராட்சி பகுதியில் பல இடங்களில், ஆயுதபூஜை பொருள்கள் விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்தனர்.வாழைக்கன்று, மாவிலை, தேங்காய், இளநீர், வாழைப்பழம், பொரி, உள்ளிட்ட பொருள்களை விற்றனர். இதில் விற்பனையாகாத மாவிலை, வாழை கன்றுகளை அப்படியே விட்டுச் சென்றுவிட்டனர். இத்துடன் கடைகளிலிருந்தும் குப்பை ஆங்காங்கே குவிக்கப்பட்டது. இந்நிலையில் நகராட்சி பகுதியில் நேற்று வழக்கமாக குப்பை அள்ளும் பணி நடந்தது. இதில், ௧௩ டன் குப்பை சேகரிக்கப்பட்டது. வழக்கமாக தினமும், ௮ முதல் ௧௦ டன் குப்பைதான் சேகரமாகும். ஆயுதபூஜையால், ௩ டன் குப்பை அதிகமாகி விட்டதாக துப்புரவு தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

