/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்கால் பக்கவாட்டு சுவர் இடிந்து சேதம் சீரமைக்க அய்யம்பாளையம் விவசாயிகள் கோரிக்கை

ADDED : ஜூலை 25, 2025 12:47 AM
சென்னிமலை, பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்து விடப்படும் தண்ணீரால், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில், ௨ லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. வாய்க்காலில் பல இடங்களில் சாலைகளில், குறுக்கே பாலங்கள் அமைக்கப்பட்டன. இதில் சில இடங்களில் பாலம் மற்றும் பக்கவாட்டுச் சுவர் சேதமடைந்துள்ளது. சென்னிமலை அருகே அய்யம்பாளையத்தில் வாய்க்கால் பாலத்தை ஒட்டி கட்டப்பட்ட பக்கவாட்டு சுவர் மிகவும் சிதைந்துள்ளது. இதனால் தரையில் மண்ணரிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: கடந்த, 2002ல் பக்கவாட்டு சுவர் சீரமைக்கப்பட்டாலும், தற்போது பாலத்தின் இருபுறமும் சுவர் முற்றிலும் இடிந்து காணப்படுகிறது. படிக்கட்டுகளும் சிதைந்து விட்டன. வாய்க்காலில் தண்ணீர் செல்லும் காலங்களில் இப்பகுதி பெண்கள் துணி துவைப்பது வழக்கம். படிக்கட்டுகள் உள்ளதாக நினைத்து தண்ணீரில் இறங்கினால் மூழ்கும் நிலை ஏற்படும். அல்லது தண்ணீரில் அடித்து செல்லும் அபாயம் உள்ளது. இடிந்த பக்கவாட்டு சுவர், படிக்கட்டுகளை சீரமைக்க வேண்டும். இவ்வாறு கூறினவ்.
இதுகுறித்து நீர்வளத்துறை அலுவலர்கள் கூறியதாவது: அய்யம்பாளையம் பாலம், சோலியம்மன் கோவில் அருகில் உள்ள பாலம், வெப்பிலி அருகே உள்ள பாலங்கள், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமானது. இவற்றை அகலப்படுத்த வாய்ப்புள்ளதால், நீர் வளத்துறை சார்பில் சீரமைப்பு செய்யவில்லை. இவ்வாறு கூறினர்.