ADDED : அக் 14, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா திருமுருகன்பூண்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 34; டிரைவர்; இவரது மனைவி யுவஸ்ரீ, 25; தம்பதியின் ஆறு மாத பெண் குழந்தை பூர்விதா. குழந்தையுடன் கோபி அருகே சுண்டக்காம்பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் யுவஸ்ரீ வசித்து வந்தார். மூன்று மாதங்களாக குழந்தை சளி தொந்தரவால் அவதிப்பட்டதால், சிகிச்சை எடுத்து வந்தனர்.
கடந்த, 12ம் தேதி நள்ளிரவில் பூர்விதாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை இறந்தது. பெரியசாமி புகாரின்படி, கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.