/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கிய அமைச்சர்
/
கைத்தறி நெசவாளர்களுக்கு போனஸ் வழங்கிய அமைச்சர்
ADDED : அக் 14, 2025 01:59 AM
சென்னிமலை, சென்னிமலை வட்டாரத்தில் உள்ள, 15 பிரதம கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த, 3,802 நெசவாளர்களுக்கு, 4.99 கோடி மதிப்பீட்டில், போனஸ் தொகை, மிகை ஊதியம் மற்றும் ஈவுத்தொகையை, சென்னிமலையில் நேற்று நடந்த விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் வழங்கி பேசினார்.
தொடர்ந்து எக்கட்டாம்பாளையம் ஊராட்சி மேட்டூர் ஏரிக்கரையில், பனை மர விதை நடும் திட்டத்தில், 1,800 பனை விதை நடும் பணியினை துவக்கி வைத்தார். நிகழ்வில் ஈரோடு கலெக்டர் கந்தசாமி, பேரூராட்சி தலைவர் ஸ்ரீதேவி அசோக், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தமிழ் செல்வன், பிரபு, நகர செயலாளர் ராமசாமி, கைத்தறி துறை உதவி இயக்குநர் சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.