/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சாக்கடையால் துர்நாற்றம்; ஆக்கிரமிப்பை அகற்ற மனு
/
சாக்கடையால் துர்நாற்றம்; ஆக்கிரமிப்பை அகற்ற மனு
ADDED : ஆக 12, 2025 02:07 AM
ஈரோடு, அந்தியூர் தாலுகா கண்ணப்பள்ளி கிராமம், பளங்காட்டூர், கணபதி நகர் பகுதி மக்கள், சாக்கடை கலந்து குடிநீர் பாட்டிலுடன், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு வழங்கி கூறியதாவது:
பளங்காட்டூர், கணபதி நகர் பகுதியில், 300க்கும் மேற்பட்ட வீடுகளில் வசிக்கிறோம். விவசாய கூலி தொழில் செய்து வருகிறோம். எங்கள் பகுதி சாக்கடை நீர், மழை நீர், 200 அடி நீளத்துக்கு குளம் போல தேங்கி நிற்கிறது. இதில் நாய்கள், ஆடுகள் விழுந்து இறந்துள்ளன. மனிதர்களும் பல முறை விபத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த சாக்கடை நீர் வெளியேற வழி அமைத்து, வடிகால் அமைக்க வேண்டும். சாக்கடை நீர் வெளியேறும் வழியை சிலர் தடுத்தும், அடைத்தும் வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.
இதனால் நிலத்தடி நீரில் சாக்கடை நீர் இறங்கி, கலங்கிய குடிநீரை குடித்து வருகிறோம். அதிகாரிகள் ஆய்வு செய்து, தேங்கியுள்ள சாக்கடை நீரை முறையாக வெளியேற வழி செய்வதுடன், ஆக்கிரமிப்பு செய்துள்ள இடங்களை அகற்றி, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு கூறினர்.

