ADDED : அக் 13, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; பள்ளி கல்வித்துறை சார்பில் ஈரோடு மண்டல விளையாட்டு போட்டி நேற்று ஈரோட்டில் நடந்-தது.
பேட்மின்டன் போட்டி, 14, 17, 19 வயது பிரிவில், 48 அணிகள் பங்கேற்றன. கூடைப்பந்து போட்டி, 14, 17, 19 பிரிவுகளில் (ஆண்கள் மட்டும்) 24 அணிகள் கலந்து கொண்டன.மாணவிகளுக்கான பேட்மின்டன் போட்டியில், 14 வயது பிரிவில் (ஒற்றையர் பிரிவு) ஈரோடு எஸ்.எஸ்.வி.என்.பள்ளி, 17 வயது பிரிவில் (ஒற்-றையர் பிரிவு) நம்பியூர் குமுதா எம்.என்.எஸ்., பள்ளி, 19 வயது பிரிவில் (ஒற்றையர் பிரிவு) பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முத-லிடம் பிடித்தன.
பேட்மின்டன் இரட்டையர் பிரிவில், ஈரோடு எஸ்.எஸ்.வி.என்.பள்ளி, கொடுமுடி தாமரைபா-ளையம் எம்.என்.எஸ்.எஸ்., பள்ளி, பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தன.
