/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு லோக்சபா தொகுதியில் பேலட் பேட்டர் பொருத்தும் பணி நிறைவு
/
ஈரோடு லோக்சபா தொகுதியில் பேலட் பேட்டர் பொருத்தும் பணி நிறைவு
ஈரோடு லோக்சபா தொகுதியில் பேலட் பேட்டர் பொருத்தும் பணி நிறைவு
ஈரோடு லோக்சபா தொகுதியில் பேலட் பேட்டர் பொருத்தும் பணி நிறைவு
ADDED : ஏப் 12, 2024 06:57 AM
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், போட்டோ, சின்னம் ஆகியவற்றுடன் கூடிய ஓட்டுச்சீட்டு (பேலட் பேப்பர்) பொருத்தும் பணி, நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
ஈரோடு லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம், தாராபுரம், குமாரபாளையம் சட்டசபை தொகுதியில், 1,688 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. தொகுதியில், 31 வேட்பாளர் போட்டியிடுவதால் ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் தலா, 2 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரம், ஒரு விவிபேட் பயன்படுத்தப்படுகிறது. அந்தந்த சட்டசபை தொகுதிக்கு இயந்திரங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மாநகராட்சி அலுவலகத்திலும், ஈரோடு மேற்கு தொகுதிக்கு தாலுகா அலுவலக வளாகத்திலும், மொடக்குறிச்சிக்கு தாலுகா அலுவலக வளாகத்திலும் பொருத்தினர். இதில் குமாரபாளையம் தவிர மற்ற ஐந்து தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரங்களிலும் பேலட் பேப்பர் ஒட்டும் பணியை நிறைவு செய்து விட்டனர். குமாரபாளையம் தொகுதியில் இரண்டாவது நாளாக நேற்றும் பணி நடந்தது. மாலையில் இப்பணி நிறைவடைந்தது.
அடுத்த கட்டமாக வேட்பாளர், அவர்களின் முகவர்கள், தேர்தல் பொது பார்வையாளர், கலெக்டர் முன்னிலையில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் தலா, 10 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மாதிரி ஓட்டுப்பதிவு செய்து, வி.வி.பேடில் சரியாக பதிவாகி வருகிறதா என்பதை உறுதி செய்யவுள்ளனர்.

