/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'மூங்கிலின் மக்கள்' கண்காட்சி அருங்காட்சியகத்தில் துவக்கம்
/
'மூங்கிலின் மக்கள்' கண்காட்சி அருங்காட்சியகத்தில் துவக்கம்
'மூங்கிலின் மக்கள்' கண்காட்சி அருங்காட்சியகத்தில் துவக்கம்
'மூங்கிலின் மக்கள்' கண்காட்சி அருங்காட்சியகத்தில் துவக்கம்
ADDED : ஆக 07, 2024 06:51 AM
ஈரோடு: ஈரோட்டின் பெருமைமிகு அடையாளம் 'சோளகர் - மூங்கிலின் மக்கள்' என்ற தலைப்பில், ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் சிறப்பு கண்காட்சி நேற்று தொடங்கியது.
வரும், 31ம் தேதி வரை நடக்கிறது. சோளகர் மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு முக்கியத்துவம் பற்றிய காட்சிப்பொருட்கள், அவர்களின் குடியிருப்பின் மாதிரி அமைப்பு மற்றும் புகைப்பட தொகுப்புகள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. சோளகர் பழங்குடியின மக்கள், ஈரோடு மற்றும் தெற்கு கர்நாடகா பகுதிகளில் வசிக்கின்றனர்.அடர்ந்த காடுகளுக்குள் வாழும் சோளகர் மக்கள், காடுகள், விலங்குகள் மற்றும் மரங்கள் என இயற்கையை நேசித்து வாழ்கின்றனர். இவர்களின் சிறப்பை அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி நடத்தப்படுவதாக, காப்பாட்சியர் ஜென்சி தெரிவித்தார்.