ADDED : அக் 28, 2024 03:41 AM
கோபி: கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்-கத்தில், நேற்று முன்தினம் நடந்த வாழைத்தார் ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 25 ரூபாய், நேந்திரன், 32 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 400, தேன்வாழை, 410, செவ்வாழை, 720, ரஸ்த்-தாளி, 660, பச்சைநாடான், 330, ரொபஸ்டா, 210, மொந்தன், 220 ரூபாய்க்கும் விற்றது. வரத்தான 10,300 வாழைத்தார்களும், ஒன்பது லட்சம் ரூபாய்க்கு விற்றது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய் ஒன்பது ரூபாய் முதல், 27 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 18,570 தேங்காய்களும், 3.19 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர், புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நடந்த ஏலத்தில், கதளி ரகம் கிலோ, 25 ரூபாய்ம், நேந்திரம் கிலோ, 38 ரூபாய்ம், பூவன் தார், 150 ரூபாய், செவ்வாழை தார், 420 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார், 400 ரூபாய்க்கும், மொந்தன் தார், 100 ரூபாய் என, 4,200 வாழைத்தார் வரத்தாகி, 5.64 லட்சம் ரூபாய்க்கு விற்றது.