/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.06 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
/
ரூ.4.06 லட்சத்துக்கு வாழைத்தார் ஏலம்
ADDED : நவ 16, 2025 01:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:அந்தியூர் புதுப்பாளையம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று நடந்தது.
ஏலத்துக்கு, 2,000 வாழைத்தார் வரத்தானது. செவ்வாழை தார், 120-700 ரூபாய், தேன்வாழை, 60-300; பூவன், 60-120; ரஸ்தாளி, 240-750; மொந்தன், 30-150; ஜி-9, 150-250; பச்சைநாடன், 120-250 ரூபாய்க்கும் விற்றது. கதளி கிலோ, 23-35 ரூபாய்; நேந்திரன் கிலோ, 12-25 ரூபாய் என, 4.06 லட்சம் ரூபாய்க்கு விற்றது.

