நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த கணக்கம்பாளையம், மேட்டுக்-காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி, 60; தன்னு-டைய மூன்றரை ஏக்கர் நிலத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.
நேற்று அதிகாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று யானைகள், வாழைத்தோட்டத்தில் புகுந்தது. 150க்கும் மேற்-பட்ட வாழைகளை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தின. இதேபோல் தங்கமுத்து என்பவரது தோட்டத்திலும் புகுந்த யானைகளால் வாழை மரங்கள் சேதமாகின. இதுகுறித்து விவசா-யிகள் கூறியதாவது: வேதபாறை வனப்பகுதியில் இருந்து இந்த யானைகள் வருகின்றன. கடந்த பத்து நாட்களாக இப்பகுதியில் தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதம் செய்கின்றன. வனத்து-றையினர் விரட்டினாலும் தோட்டத்தில் புகுவது தொடர்கதையாக உள்ளது. இவ்வாறு கூறினர்.

