/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வாழை இலை வியாபாரி மர்மச்சாவால் பரபரப்பு
/
வாழை இலை வியாபாரி மர்மச்சாவால் பரபரப்பு
ADDED : பிப் 08, 2025 06:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலுாரை சேர்ந்தவர் ரவி, 55; கடந்த எட்டு ஆண்டுகளாக, சத்தியமங்கலம் பகுதியில் தங்கி, வாழை இலை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் கரட்டூர் பகுதியில் மயங்கி கிடந்தார். அப்பகுதியினர் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.