ADDED : ஆக 02, 2026 06:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு வ.உ.சி., நேதாஜி காய்கறி மார்க்கெட்டில், ஆடிப்பெருக்கு பண்டிகையால் வாழைத்தார் விலை உயர்ந்தது.
கடந்த
வாரம் ரூ.500க்கு விற்ற செவ்வாழை தார் நேற்று, ரூ.600 முதல் ரூ.1,000 வரை
விற்றது. இதேபோல் ரூ.350க்கும் விற்ற தேன்வாழை தார், ரூ.400 முதல்
ரூ.800; ரூ.250க்கு விற்ற பூவன் தார் ரூ.350 முதல் ரூ.580; ரூ.280க்கு
விற்ற பச்சைநாடான் ரூ.300 முதல் ரூ.550; ரூ.100க்கு விற்ற மொந்தன் ரூ.150
முதல் ரூ.380; ரூ.250க்கு விற்ற ரொபஸ்டா தார், ரூ.300 முதல் ரூ.580 வரை
விற்றது. இதேபோல் கதலி கிலோ ரூ.58 முதல் ரூ.70, நேந்திரன் கிலோ ரூ.34
முதல் ரூ.40 வரை விற்றது.
