/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஒற்றை யானையால் வாழை நாசம்; கிராமத்தில் யானைகளால் அச்சம்
/
ஒற்றை யானையால் வாழை நாசம்; கிராமத்தில் யானைகளால் அச்சம்
ஒற்றை யானையால் வாழை நாசம்; கிராமத்தில் யானைகளால் அச்சம்
ஒற்றை யானையால் வாழை நாசம்; கிராமத்தில் யானைகளால் அச்சம்
ADDED : ஜன 28, 2025 06:52 AM
பவானி: அம்மாபேட்டை அடுத்த சென்னம்பட்டி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஆண் யானை, வன எல்லைக்கு அருகாமையில் உள்ள ஜரத்தல் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு புகுந்தது.
அப்பகுதியில் வாழை தோட்டத்திலும், நெல் வயலிலும் புகுந்து, தின்றும், மிதித்தும் பயிர்களை சேதம் செய்தது. சத்தம் கேட்டு எழுந்த விவசாயிகள், யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். வெகு நேரத்துக்குப் பிறகு பயிர்களை சேதம் செய்த நிலையில், வனத்தில் நுழைந்தது. யானையை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட கோரிக்கை எழுந்துள்ளது.
* ஜீரகள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட தாளவாடி அருகே மல்லன்குழி கிராமத்தில், 10க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக விவசாய நிலங்களில் நேற்று உலா வந்தது. சிறிது நேரம் கழிந்த நிலையில் சாலையை கடந்து சென்றது. இதனால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.