/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.8.52 லட்சத்துக்கு வாழைத்தார்கள் வியாபாரம்
/
ரூ.8.52 லட்சத்துக்கு வாழைத்தார்கள் வியாபாரம்
ADDED : ஜூன் 27, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 2,906 வாழைத்தார்கள், 8.52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி கிலோ, 60 ரூபாய்க்கும், நேந்திரன், 43 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 900, தேன்வாழை, 730, பூவன், 710, ரஸ்த்தாளி, 610, மொந்தன், 500, ரொபஸ்டா, 480, பச்சைநாடான், 520 ரூபாய்க்கும் விற்பனையானது. விற்பனைக்கு விவசாயிகள் கொண்டு வந்த, 2,906 வாழைத்தார்களும், 8.52 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக, அதன் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.