ADDED : ஏப் 23, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:வங்கி ஊழியர் சங்கம் சார்பில், ஈரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அனைத்து பணி நிலைகளிலும் தேவையான அளவுக்கு ஊழியர்களை பணி அமர்த்த வேண்டும். தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்க வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும்.
ஒருங்கிணைந்த இடமாறுதல் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வங்கி ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட துணை தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.
இந்தியன் வங்கி ஊழியர் சங்க துணை தலைவர் முருகேசன், வங்கி ஊழியர் சங்க ஈரோடு மாவட்ட பொது செயலாளர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.