ADDED : டிச 31, 2025 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: வங்கி ஊழியர், அதிகாரிகள் சங்கங்களின் கூட்ட-மைப்பு சார்பில், வாரத்துக்கு ஐந்து பணி நாட்கள் என்ற நிலையை அமல்படுத்த வேண்டும்.
இதை அமல்படுத்தாமல் தாமதப்படுத்தும் மத்திய அரசை கண்டித்து, ஈரோடு பாரத ஸ்டேட் வங்கி முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.வங்கி ஊழியர் சங்க தலைவர் அல்தாப் உசேன் தலைமை வகித்தார். மாவட்ட வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் நரசிம்மன், கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கணேஷ் உள்ளிட்ட வங்கி ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.

