ADDED : ஆக 28, 2026 06:39 AM
ஈரோடு:கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வாரத்தில்,
5 நாள் வேலை என்ற கோரிக்கையை இந்திய வங்கிகள் அசோசியேஷன் ஏற்று
கொண்டது.
எனினும் இதை மத்திய அரசு, நடைமுறைப்படுத்த தாமதம் செய்து
வரும் போக்கு கண்டிக்கதக்கது. தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம்
செய்ய வேண்டும். வங்கி பணிகளை வெளிபணிக்கு விடுவதை நிறுத்த வேண்டும்.நிலுவையில்
உள்ள பிரச்னைகளை தீர்க்க வேண்டும்.அனைத்து நிலைகளிலும் போதிய
ஆட்களை நியமிக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய
வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஓய்வூதிய
சீரமைப்பு மற்றும் மேம்பாட்டை மேற்கொள்ள வேண்டும். பணி கொடை உச்ச
வரம்பை ரூ.25 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கைகளை
வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் கணேஷ் தலைமையில் நேற்று
ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகிகள் ஆனந்தகுமார்,
அல்டாப் ஹூசேன், வேலுசாமி, நந்த குமார், ஷியாம் சுந்தர் மற்றும் பலர்
பங்கேற்றனர். நரசிம்மன் நன்றி கூறினார்.
